கொச்சி துறைமுகம் அருகே விபத்துக்குள்ளான சரக்கு கப்பலில் இருந்து ஒரு கண்டெய்னர் குமரியின் வாணியக்குடி மீனவ கிராமத்தில் கரைஒதுங்கிய நிலையில் வெள்ளை நிற துகள்கள் வெளியேறியது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கால்சியம் கார்பைடு என்ற ரசாயன கண்டெய்னர்களுடன் புறப்பட்ட கப்பல் கடந்த சனிக்கிழமை கொச்சி துறைமுகம் அருகே நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் ஒரு கண்டெய்னர் மட்டும் குமரியில் கரை ஒதுங்கியதையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.