news

சாதிவாரி கணக்கெடுப்பு - அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Azhagiri Arumugam

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சமூகநீதி கணக்கெடுப்பு, தாழம்பூர் அனாதீன நிலம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை

முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சமூகநீதி சர்வே எடுக்க ஆணையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்

முதல்வர் விஜய்

மக்களுக்கு என்ன தேவையோ அதற்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார். பொது மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

ஆணையம் அமைக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

8 நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி

தமிழ்நாட்டில் 8 நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்க அனுமதி அளிக்க, முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.