ஒரு வருடங்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வரும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது பீகாருக்கும், பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரளவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா ஆளுநர் ரகுபர் தாசின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர், மிசோரமின் ஆளுநராக இருந்த ஹரிபாபுவை ஒடிசாவுக்கு மாற்றி உத்தரவிட்டார்