முதல்வர் விஜய்  
news

விருது விழாவில் முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி

’என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான செல்லங்கள், நண்பா, நண்பீஸுக்கு எனது அன்பான வணக்கம்; உங்களுக்குத்தான் கோடி நன்றிகளைச் சொல்ல வேண்டும். இந்த மேடைக்கான வலிமை வாய்ந்த அடித்தளம் மாணவ மாணவிகளாகிய நீங்கள் தான் என, விருது விழாவில் முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

Azhagiri Arumugam
முதல்வர் பேச்சு

அசரவைக்கும் மெனு

சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவில், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையில் பிரமாண்ட விருந்து தயார் செய்யப்பட்டது. பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா, ஸ்பெஷல் பிரெட் மால்புவா, வாணியம்பாடி ஸ்பெஷல் கறிப்பலா தம் பிரியாணி, தென்னங்குருத்து பொரியல், எரிசேரி, கருப்பு கவுனி அரிசி பாயாசம் உள்ளிட்ட சுவையான உணவுகள் வழங்கப்பட்டது.

சுவையான விருந்து

உங்களை நம்பித்தான்

’நான் அரசியல் பேசவோ, ஓட்டு கேட்கவோ விருது வழங்கும் விழாவுக்கு வரவில்லை உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள், உங்களை நம்பித்தான் பெற்றோர் உள்ளனர்; உங்களை நம்பித்தான் நானும் இருக்கிறேன், மொத்த தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது,’ என்று முதலமைச்சர் விஜய் உரை நிகழ்த்தினார்.

விஜய் பேச்சு