news

முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் விஜய் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Azhagiri Arumugam

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் 119வது ஜெயந்தி & 64வது குருபூஜை இன்று அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஜெயந்தி விழா

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். 119ஆவது பிறந்தநாள் மற்றும் 64ஆவது நினைவு நாளை ஒட்டி மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

முதல்வர் விஜய்
தேவர் ஜெயந்தி விழா
முதல்வர் வணக்கம்
சென்னை

முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி, முதலமைச்சர் விஜய் வணக்கம் செலுத்தினார். சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின் மரியாதை

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மு.க.ஸ்டாலின்