Idly kadai 
news

12 நாட்களில் இட்லி கடை செய்துள்ள வசூல்

உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

நடிகர் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் இட்லி கடை. நடிப்பது மட்டுமின்றி இப்படத்தை அவர் இயக்கியும் இருந்தார். இது அவர் இயக்கத்தில் வெளிவந்த 4ஆவது திரைப்படம். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, இளவரசு, ராஜ்கிரண், கீதா கைலாசம் மற்றும் சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.யதார்த்தமான கதைக் களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபீஸை கடந்திருக்கும் இட்லி கடை, உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, இப்படம் உலகளவில் 12 நாட்களில் ரூ. 70+ கோடி வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. 100 கோடி Clubல் இப்படம் இணையுமா ? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்