தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச்-18 இன்று தங்கம், வெள்ளி விலை
சென்னையில் ஒரு சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி, 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-12 தங்கம், வெள்ளி நிலவரம்
ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,970 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-13 தங்கம், வெள்ளி விலை
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-14 விலை சரிவு
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-16 விலை நிலவரம்
மார்ச் 16ஆம் தேதி, காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.276க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ பார் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,76,000க்கு விற்பனை ஆனது.
மார்ச்-17 தங்கம் விலை
ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் வெள்ளி விலை கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
12 மார்ச் - ரூ.1,19,760
13 மார்ச் - ரூ.1,19,200
14 மார்ச் - ரூ.1,18,080
16 மார்ச் - ரூ.1,17,680
17 மார்ச் - ரூ.1,17,200
18 மார்ச் - ரூ.1,16,560 இன்றைய விலை