ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதால் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என நேட்டோ எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டாம் என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால், இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகள் தற்போதைய சந்தை சூழ்நிலை மற்றும் புவிசார் அரசியல் நிலைகளை பொறுத்தது என்றார்.
நமது மக்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வது இந்தியாவுக்கு ஒரு முக்கிய முன்னுரிமை என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்த ரன்தீர், இந்த விஷயத்தில் இரட்டை வேடம் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.