"தேவரா" திரைப்படம் வெளியான 3 நாட்களில் 304 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாகவும், தென்னிந்திய திரையுலகில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ள "தேவரா பார்ட் 1" படத்தில், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் கடந்த 27-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம், முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்த நிலையில், 3-வது நாள் முடிவில் 304 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.