2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் எம்.எஸ்.தோனி பயிற்சியை தொடங்கியுள்ள புகைபடம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 23 ஆம் தேதி சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், புதன் கிழமை சென்னை விமான நிலையம் வந்தடைந்த தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே 10 நாட்கள் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி முகாம் நடத்த உள்ளதாக கூறப்படும் நிலையில், தோனி பயிற்சியில் ஈடுப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.