krg 
news

உடல் உறுப்புகள் மருத்துவக் கல்லூரிக்கு தானம்

மூளைச்சாவு அடைந்த தினகரன் செய்தியாளர்

Fyrose Banu

கிருஷ்ணகிரியில் மூளைச்சாவு அடைந்த தினகரன் செய்தியாளர் உடல் உறுப்புகள் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் அரசு மரியாதை செலுத்தினார்.

மூளைச்சாவு அடைந்த தினகரன் நாளிதழ் செய்தியாளர்
காவேரிப்பட்டினத்தில் தினகரன் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்தவர் அன்பரசன் (54). இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர் பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.