துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரியிடம், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டாலன் கிரீக்ஸ்பூர் 2க்கு 6, 7க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் .