அமெரிக்க பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவிகித வரி விலக்கை அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், இரண்டு நாடுகளுக்கும் இடையே இது தொடர்பான வர்த்தக உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறினார்.
அதே நேரம் இந்தியாவுடன் துரித கதியில் வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள தாம் அவசரப்படவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்திய-அமெரிக்க உடன்படிக்கை குறித்து ஏற்கனவே பலமுறை பேசியுள்ள அதிபர் டிரம்ப் இப்போது, இந்தியா நூறு சதவிகித வரி விலக்கிற்கு தயாராக உள்ளது என பேசத் துவங்கி உள்ளதால் டெல்லியில் வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் உஷார் அடைந்துள்ளன.