16 
news

எவெரெஸ்ட் மலையேறிய இந்தியர்... எவரெஸ்ட் உச்சியை எட்டிவிட்டு திரும்பும் போது நடந்த சோகம்

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை எட்டிவிட்டு திரும்பும் வழியில் உயிரிழந்த இந்தியரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Srini Vasan

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை எட்டிவிட்டு திரும்பும் வழியில் உயிரிழந்த இந்தியரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுபத்தரா கோஷ் என்பவர் எவரெஸ்ட் மலையின் உச்சியை எட்டிவிட்டு திரும்பும் வழியில் ஹிலாரி படிக்கு கீழே உயிரிழந்தார்.

மரண மண்டலத்தில் உள்ளதாக கூறப்படும் ஹிலாரி படியில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான இயற்கை ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவு என கூறப்படுகிறது.

முன்னதாக சுபத்தரா கோஷ் உடன் மலையேறிய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிலிப் சாண்டியாகோ, முகாம் 4-இல் இருந்து மலை உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த போது உயிரிழந்தார்.