36 
news

பொய் புகார் என் குடும்பத்தையே சிதைத்துவிட்டது- ஜெயசூர்யா.. சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் - நடிகர் ஜெயசூர்யா

தன் மீதான பாலியல் புகார்களை மலையாள நடிகர் ஜெயசூர்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Srini Vasan

தன் மீதான பாலியல் புகார்களை மலையாள நடிகர் ஜெயசூர்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பெய்யானவை எனவும், இப்படியான பொய் குற்றச்சாட்டுகள் தன்னையும், தனது குடும்பத்தையும் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களையும் சிதைத்துவிட்டதாக வேதனை பகிர்ந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ள அவர், மனசாட்சி இல்லாத எவருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது எளிது, ஆனால் அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது என்பது வேதனைக்குரியது என தெரிவித்திருக்கிறார்.