தனது பிள்ளைகளான தேஜஸ்விக்கும் ரோஹிணிக்கும் இடையேயான சண்டை விரைவில் பேசி தீர்க்கப்படும், தொண்டர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாகிகள், தொண்டர்களுக்கு லாலு பிரசாத் ஆறுதல் கூறியுள்ளார். நடந்து முடிந்த பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கு தேஜஸ்வியின் சகோதரி ரோகிணியே காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அனைத்து பழியையும் ஏற்றுக் கொள்வதாக கூறிய ரோஹிணி அரசியல் மற்றும் குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தன்னை அவதூறாக பேசி அடிக்க முயன்றதாக தேஜஸ்வி மீது அவர் குற்றம் சாட்டி உள்ளார்.