மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் "எஸ்.எஸ்.எம்.பி 29" படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் மகேஷ்பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நானா படேகரை படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது.
கதையை கேட்ட படேகர், தனது கதாபாத்திரம் மிகவும் சிறியதாகவும் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி வாய்ப்பை மறுத்ததாக சொல்லப்படுகிறது.