நகைக் கடன் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் செய்துள்ள பரிந்துரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏழைகளைப் பாதிக்கும் தங்க நகைக் கடன் போன்ற விவகாரங்களில் மாநிலங்களை கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி வரைவு நெறிமுறைகள் பற்றி கவலை தெரிவித்து முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.