இன்று பிற்பகல் தங்கம் விலை 
news

தங்கத்தின் விலையில் ஒரே நாளில் ரூ.2,400 குறைவு

ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ஆயிரத்து 600 ரூபாய் குறைந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-30
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-31
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல் 01
ஒரு சவரனுக்கு 3,040 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல் 02 காலை
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல் 02 பிற்பகல்
ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலையில் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ஆயிரத்து 600 ரூபாய் குறைந்தது.
ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 200 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
30 மார்ச் - ரூ.1,08,800 காலை
30 மார்ச் - ரூ.1,10,160 பிற்பகல்
31 மார்ச் - ரூ.1,09,360
01 ஏப்ரல் - ரூ.1,12,400
02 ஏப்ரல் - ரூ.1,11,600 காலை
02 ஏப்ரல் - ரூ.1,10,000 பிற்பகல்