rain 
news

27ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு

காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றது

Web Team

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றதாகவும், இது வியாழக் கிழமைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்யும் என்றும் 28ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.