47 
news

மலையாள சினிமாவில் புயலை வீசிய ஹேமா கமிட்டி அறிக்கை.. மவுனத்தை கலைத்தார் மலையாள உச்ச நடிகர் மம்மூட்டி.. மலையாள சினிமாவில் "அதிகார மையம்" என்று எதுவும் இல்லை

மலையாள சினிமாவில் புயலை வீசிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் மம்மூட்டி மவுனம் கலைத்திருக்கிறார்.

Srini Vasan

மலையாள சினிமாவில் புயலை வீசிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் மம்மூட்டி மவுனம் கலைத்திருக்கிறார். மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருவதாக பேசப்பட்டது. இதையடுத்து மவுனத்தை கலைத்த நடிகர் மோகன்லால், பாலியல் புகார்களுக்கு அம்மா சங்கம் மட்டுமே பொறுப்பாக முடியுமா? என செய்தியாளர்களிடம் நொந்துகொண்டார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் "அதிகார மையம்"என்று எதுவும் இல்லை என்றும், பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை நேர்மையாகவும் நியாயமாகவும் விசாரிக்க வேண்டும் என உச்ச நடிகரான மம்மூட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.