pm 
news

மிகப்பெரிய நீர்மின் நிலையம் திறப்பு

பூடான் நாட்டில், பிரதமர் மோடி 1,020 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

Web Team

பூடான் நாட்டில், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி 1,020 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்தியா - பூடான் கூட்டாண்மையின் முக்கிய தூணாக எரிசக்தி ஒத்துழைப்பு விளங்குவதாக பிரதமர் மோடி, தமது எக்ஸ்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சியை ஊக்குவித்தல், நட்பை ஆழப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மையை நோக்கி இரு நாட்டு உறவும் நகர்வதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.