18 
news

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதன் எதிரொலி... பாகிஸ்தானில் வறண்டு காட்சியளிக்கும் செனாப் நதி

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கிறது.

Srini Vasan

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கிறது.

இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டது.

இதன் காரணமாக, பாகிஸ்தானின் 2 மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில், பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, இந்தியாவை சீண்டி பார்த்த பாகிஸ்தானுக்கு இதுவே தக்க பதிலடி என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.