Ind vs SL 
news

இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா

பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தாா்.

Manigandan Raja

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் இந்திய மகளிர் அணி வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் சோ்க்க, இந்தியா 13.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியின் பௌலிங்கில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தாா்.