மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவம்பர் 2ஆம் தேதி மாலை வாக்கில் ஆந்திர கடற்கரைக்கு அருகில், மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பகுதியை வந்தடையக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த முரசு என்ற பெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பரில் மழை குறையும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் சராசரி அளவில் 77% வரை மழை பொழியக்கூடும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திராவிலும் இயல்பை விட மழை பொழிவு குறையும் என்றும் கணித்துள்ளது.
தீபாவளி ஷாப்பிங் எதிரொலி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை; வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.