பெங்களூரு 6 விக்கெட்டில் வெற்றி 
news

ஐபிஎல் 2026 கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு 6 விக்கெட்டில் வெற்றி

194 ரன்கள் என்ற இலக்கை 19.1 ஓவரில் எளிதாக எட்டிய RCB, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

Azhagiri Arumugam

194 ரன்கள் என்ற இலக்கை 19.1 ஓவரில் எளிதாக எட்டிய RCB, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

6 விக்கெட் வித்தியாசத்தில்...
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலியின் அபாரமான சதத்தின் உதவியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடி வலுவான இலக்கை நிர்ணயித்தனர்.

சவாலான இலக்கு
193 ரன்கள் என்ற சவாலான இலக்கை தொடர்ந்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB அணி, தொடக்கத்தில் சற்றே தடுமாறினாலும், அதன் பின்னர், விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 60 பந்துகளில் 105 ரன்கள் என 11 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு, கோலி கொண்டு சென்றார். தேவ்தத் படிக்கல் 39 ரன்கள் சேர்த்து கோலிக்கு சிறந்த துணையாக இருந்தார். இறுதியில் ஜிதேஷ் சர்மா 8* மற்றும் மற்ற வீரர்கள் அமைதியாக ஆட்டத்தை முடித்து வைத்தனர்.

புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
பந்துவீச்சில் கொல்கத்தா அணிக்காக கார்த்திக் தியாகி 3 விக்கெட் எடுத்தாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டதால் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் RCB அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளேஆஃப் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மறுபுறம், KKR அணி பின்னடைவை சந்தித்து உள்ளது.