ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 2 சிக்சருடன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதன் மூலம் நடப்பு தொடரில் அவர் இதுவரை 33 சிக்சர்களை வாரி வழங்கி இருக்கிறார்.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தனது பந்து வீச்சில் 31 சிக்சர்கள் வழங்கியதே அதிகபட்சமாக இருந்தது