100 
news

அத்துமீறும் இஸ்ரேலை தடுத்து நிறுத்தவும்.. ஐநா பொதுச்செயலருக்கு ஈரான் கடிதம்

இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை உடனே கூட்டுமாறு ஈரான் கேட்டுக் கொண்டுள்ளது.

Srini Vasan

இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை உடனே கூட்டுமாறு ஈரான் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐநா பொதுச்செயலருக்கு அனுப்பிய கடித த்தில், இஸ்ரேலின் தொடர் அக்கிரமத்திற்கு தடை விதித்து, மேற்கு ஆசியாவில் முழுப் போரை திணிக்க முயலும் இஸ்ரேலை தடுத்து நிறுத்துமாறு ஈரான் தூதர் அமீர் செய்யது ஈராவானி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குத்தரஸ், இந்த வன்முறையை நிறுத்த அனைத்து தரப்பினரும் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.