40 
news

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர்.. ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் இறுதி போட்டிக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முன்னேறினார். முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

Srini Vasan

இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முன்னேறினார். முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-க்கு 3, 7-க்கு 7, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.