இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதிப் போட்டியில், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் பெடன் சியர்ன்ஸ் உடன் மோதினார்.
இதில் பவுலினி 7க்கு 5, 6க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.