முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கமல்ஹாசன்,
தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே,
தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்திருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.