news

🔴LIVE : CM VIJAY |ஆளுநர் உரையுடன் கூடியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.

Azhagiri Arumugam

ஆளுநர் வருகை
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் அர்லேகர் வருகை தந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வரவேற்பளித்தார். தொடர்ந்து, போலீசார் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

முதல்வர் விஜய் வருகை
17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க முதல்முறையாக வந்த முதல்வர் விஜய்க்கு காவல்துறை மரியாதை வழங்கினர்.

‘வாயை திறங்க CM’ - திமுக பேட்ஜ்
சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ‘வாயை திறங்க CM’ என்ற வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுகவினர்; சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து வந்தனர்.

பதாகைகள் ஏந்தி முழக்கம்
ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு முழக்கமிட்டனர். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து வாய் திறங்கள் சிஎம், Reels இங்கே Real எங்கே?, திரையில் நாயகன் தரையில் வில்லன் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.