கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, பேருந்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டுவந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபாலபுரம் பகுதியில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து தமிழக பகுதியில் விற்பனை செய்வதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய கிடைத்தது.
அதன் பேரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த பேருந்தில் சந்தேகமளிக்கும் வகையில் வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர்களிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், திருச்சியை சேர்ந்த ஜெயராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 146 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.