11 
news

'பராசக்தி' படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்?.. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி'

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Srini Vasan

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.