9 
news

குரங்கம்மை நோய் தடுப்பு பணிகள் - அமைச்சர்கள் ஆய்வு.. காலாவதியான 800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் - அமைச்சர்

திருச்சியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி :

தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் திருச்சி மதுரை பரிசோதனை செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 58லிருந்து 64 விமானங்கள் வருகிறது. இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை சோதனை செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு இதுவரை 11 ஆயிரம் பேர் அதிக அளவில் இருக்கிறது ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது இந்த ஆண்டு நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்யப்பட்டது. அவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் ஆய்வு செய்யப்பட்டு அங்கு காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.