25 
news

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு MP தயாநிதி மாறன் கடிதம்.. இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகள்

இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு வலைதளங்கள் மூலம் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார்.

Srini Vasan

மும்பையில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வதாக வந்த புகார்கள் தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், இதுபோன்ற கருப்புச் சந்தைகளின் நடவடிக்கைகளால் உண்மையான நுகர்வோர்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகிப் பாதிப்படைதாகவும், 2500 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படும் டிக்கெட்டுகள், அதிகாரப்பூர்வமற்ற தளங்கள் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை மறுவிற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.