சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவை போற்றும் விதமாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும் என்றும், ஆங்கிலேய ஆட்சியை வேரறுக்க போர்க்கொடி உயர்த்தியவர் பூலித்தேவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.