ஆபரேஷன் சிந்தூரின் போது தாங்கள் எந்த வகையிலும் பாகிஸ்தானுக்கு உதவி செய்ய வில்லை என சீனா தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா பல்வேறு ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கி அவை போர் களத்தில் சோதித்து பார்க்கப்பட்டது என இந்திய ராணுவ துணை தலைமை தளபதி ராகுல் சிங் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பெய்ஜிங்கில் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் ((Mao Ning)) இந்தியாவுடன் சீனாவுக்கு பாரம்பரியமான நட்புணர்வு உள்ளது என்றார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் நிலவும் தருணத்தில் அதை கெடுக்கும் எந்த நடவடிக்கையிலும் சீனா ஈடுபடாது என அவர் கூறினார்.அதே போன்று ரபேல் போர் விமானங்களை குறித்து சீனா இதர நாடுகளிடம் எந்த விமர்சனமும் செய்யவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.