DPM School students protest 
news

தாராபுரத்தில் இரு வேறு இடங்களில் பெற்றோர் சாலைமறியல்

கட்டிட இடிப்பை 4 மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்

Web Team

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பள்ளி கட்டடம் இடிப்பு விவகாரம் தொடர்பாக, பெற்றோர் இரு வேறு பகுதிகளில் சாலைமறியலில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு நிலவியது. தேன்மலர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தண்டபாணி, தனது அண்ணன் மகனும் சென்னையில் வழக்கறிஞராக இருந்தவருமான முருகானந்தத்தை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முருகானந்தத்தின் தாய் அளித்த மனுவை விசாரித்த நீதிபதி, டிசம்பர் 1-ஆம் தேதி பள்ளிக் கட்டடத்தை இடிக்கும்படி உத்தரவிட்டார். இதையறிந்த பெற்றோர், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனக் கூறி, கட்டட இடிப்பை 4 மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.