Sofia, Bulgaria 
news

பட்ஜெட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஆளுங்கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட மக்கள் - கற்கள், பாட்டில், பட்டாசுகளை வீசியதால் கலவரம்

Web Team

பல்கேரியா நாட்டில், அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கேரியா தலைநகர் சோஃபியா மற்றும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. வரைவு செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், தேவையற்ற செலவினங்களுக்கு நிதியளிக்க வரிகளை உயர்த்துவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், ஆளுங்கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட ஏராளமான மக்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் மீது கற்கள், பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளை வீசியதால் கலவரமானது.