kani 
news

"திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பிளான்"

"பாஜகவின் பகல்கனவு பலிக்கவே பலிக்காது"

Web Team

திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக துடிப்பதாக குற்றம் சாட்டி உள்ள திமுக எம்.பி. கனிமொழி, தமிழக மக்கள் மத்தியில் பாஜகவினரின் பகல் கனவு பலிக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மத கலவரத்தை உருவாக்கி குளிர் காயலாம் என்ற நினைப்பில் இருக்கும் பாஜகவினரின் குரோத புத்தி குறித்து, தமிழக மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.