delhi 
news

டெல்லி குண்டு வெடிப்புக்கு முன் ட்ரோன் தாக்குதலை நடத்த திட்டம்

ட்ரோன்களை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது NIA விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Web Team

டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு முன்பு, பயங்கரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது NIA விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில், தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி உமருடன் நெருக்கமாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த டேனிஷ் என்ற ஜசீர் பிலால் வானி கைது செய்யப்பட்டார். அவர் குண்டுவெடிப்புக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்து கொடுத்ததோடு, டிரோன்கள் மற்றும் ராக்கெட்களை தயாரித்துக் கொடுத்ததை NIA கண்டறிந்துள்ளது.