ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 46 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆனால் இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 257 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரைசதமடித்து அசத்தினார்.