pm 
news

மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்: கொடி அசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், மாருதி சுசூகியின் முதல் மின்சார காரை கொடி அசைத்து பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

Web Team

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், மாருதி சுசூகியின் முதல் மின்சார காரை கொடி அசைத்து பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, முதல் முறையாக மின்சார கார் தயாரித்துள்ளது. e-vitara என்ற பெயரில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த கார்களின் அறிமுக விழா, குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த ஹன்சல்பூரில் நடந்தது.

பிரதமர் மோடி, கொடி அசைத்து புதிய மின்சார வாகனத்தின் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சக்தி ஜனநாயகம். இங்கு அதிக திறமை உடையவர்கள் உள்ளனர்.

இதனால் அனைத்து இக்கட்டான சூழல்களிலும் நாம் வெற்றி அடைய முடிகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார கார்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இது 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு சிறப்பு வாய்ந்த நாள்.

ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து, ஜப்பானுக்கே ஏற்றுமதி செய்ய உள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும்.

செமி கண்டக்டர் துறையில் இந்தியா தனது பாய்ச்சலை தொடங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உற்பத்தி துறையில் 500 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 'மேக் இன் இந்தியா' யாத்திரையில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்; உலகுக்காக உற்பத்தி செய்யுங்கள் என்பதே நமது தாரக மந்திரம்.

’மேக் இன் இந்தியா’ திட்டமானது, உள்நாடு மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.