46 
news

CWC நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற தொகுப்பாளினி பிரியங்கா.. அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு

வேறொரு சமையல் நிகழ்ச்சியில் சமைக்க தெரியாமல் வெளியேறிய தாம் இன்று டைட்டில் வென்றதற்கு காரணம் என்னுடன் இருப்பவர்கள் தான் என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற தொகுப்பாளினி பிரியங்கா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Srini Vasan

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தோல்வி அடைந்து 10 வருடங்களுக்கு பின், குக் வித் கோமாளியின் கோப்பை என் கையில் உள்ளது என்றும், சமையலறையில் தமது திறமைகளை மெருகேற்ற உதவிய பயிற்சியாளர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்கு நான் மட்டுமே போட்டியாளர் எனவும் பதிவிட்டுள்ளார்.