news

முன்னாள் அமைச்சர் K.N.நேரு இடங்களில் ரெய்டு

திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் ரெய்டு நடத்தினர்.

Azhagiri Arumugam

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்காக 634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக சோதனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கே.என்.நேரு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இல்லம், அலுவலகங்களிலும் ஆய்வு நடந்தது.

கோவையில் கே.என்.நேரு தொடர்புடைய இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். சிங்காநல்லூர் அருகே உள்ள நேருவின் சகோதரருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடந்தது.

திமுக Ex.MLAக்கள் வீடுகளில் சோதனை

நாமக்கல்லில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராமலிங்கம் வீடு, S.S. கன்ஸ்ட்ரக்சன் உட்பட 4 இடங்களில் சோதனை நடந்தது. வேலூரில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடைபெற்றது.

கே.என்.நேரு இடங்களில் ரெய்டு

2 மாதங்களில் 2ஆவது முறையாக ரெய்டு

அரசுப் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், நேரு தொடர்புடைய இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரெய்டு நடைபெற்றது. இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.