Ramadas 
news

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் புகார்... தந்தை, மகன் இடையே நீடிக்கும் பனிப்போர்

பாமக தலைவர் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதம் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

Web Team

பாமக தலைவர் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதம் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்தில் கூறி இருப்பதாவது:

தலைவர் பதவிக்கான காலம் நிறைவடைந்த நிலையில், கட்சி நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளனர். தலைவர் பதவியை நீட்டித்திருப்பது கட்சி விதிகளுக்கு முரணானது.

அன்புமணியை நீக்க பாமக விதி 13இன் படி பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றுக்கு கட்சி நிறுவனர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவரின் ஒப்புதல் இல்லாமல் தலைவர் பதவியை தன்னிச்சையாக நீட்டிப்பு செய்துள்ளனர்.

தலைவர் பதவியில் இருந்த அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது அல்லது சஸ்பெண்ட் செய்வதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இந்நிலையில், பாமகவில் உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.