IPL 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் RCB 
news

IPL 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் RCB

IPL 2026 தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் கடும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Azhagiri Arumugam

IPL 2026 தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் கடும் மாற்றங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

தொடர்ந்து ஆர்சிபி முதலிடம்
11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB நெட் ரன் ரேட்டின் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே புள்ளிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் SRH, குஜராத் டைட்டன்ஸ் GT அணிகளும் பின்தொடர்கின்றன. இந்த சீசனில் பல அணிகள் சம பலத்துடன் விளையாடுவதால், பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது.

மீண்டும் வெற்றி பாதைக்கு...
RCB அணி 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் +1.103 என்ற சிறந்த நெட் ரன் ரேட்டை பெற்று உள்ளது. தொடர்ந்து இரண்டு தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியிருப்பது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது.

2, 3ஆவது இடத்தில்...
இரண்டாவது இடத்தில் இருக்கும் SRH அணியும் 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும், +0.737 என்ற நெட் ரன் ரேட்டால் பின்தங்கியுள்ளது. கடந்த ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று வலுவான ஃபார்மில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள GT அணியும் 14 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. தொடக்கத்தில் சற்றே தடுமாறிய அணியான GT, தொடர்ந்து வெற்றிகளை குவித்து முன்னேறியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் எங்கே?
பஞ்சாப் கிங்ஸ் PBKS 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் அணியின் சமீபத்திய தோல்விகள் ரசிகர்களை கவலையடையச் செய்து உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் CSK மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் RR அணிகள் தலா 12 புள்ளிகளுடன் ஐந்து, ஆறாவது இடங்களில் உள்ளன. CSK அணியின் சமீபத்திய வெற்றி, பிளேஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

வெற்றி பெற வேண்டிய கட்டாயம்
டெல்லி கேப்பிடல்ஸ் DC, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR அணிகள் இன்னும் வாய்ப்பில் இருந்தாலும், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி கட்டாயமாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் MI மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG அணிகள் தலா 6 புள்ளிகளுடன் கடைசி இடங்களில் உள்ளன. இவ்விரு அணிகளும் இனி நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ரசிகர்கள் ஆவல்
IPL 2026 சீசன் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஒவ்வொரு போட்டியும் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில், அடுத்த சுற்றுகளை ஆவலுடன், ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.