9 
news

ராணுவ பட்ஜெட்டுக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி? ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்க திட்டம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ராணுவ பட்ஜெட்டிற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ராணுவ பட்ஜெட்டிற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

துணை பட்ஜெட் மூலம் வழங்கப்படும் இந்த நிதியை தொடர்ந்து ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட் 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.