49 
news

ரஷ்யாவின் உளவாளி திமிங்கலமான 'ஹ்வால்டிமிர்' இறந்தது 'ஹ்வால்டிமிர்' நார்வே கடற்பகுதியில் இறந்து கிடந்ததாக தகவல்

ரஷ்யாவின் உளவாளி திமிங்கலமான 'ஹ்வால்டிமிர்' நார்வே கடற்பகுதியில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

ரஷ்யாவின் உளவாளி திமிங்கலமான 'ஹ்வால்டிமிர்' நார்வே கடற்பகுதியில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 14-அடி நீளமும் 2,700-பவுண்டு எடையும் கொண்ட பெலுகா திமிங்கலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே நாட்டின் ஆர்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு பெல்ட்டுடன் காணப்பட்டதால் ரஷ்ய கடற்படையால் பயிற்சி அளிக்கப்பட்ட உளவாளி திமிங்கிலமோ என யூகங்கள் எழுந்தன. அந்தத் திமிங்கிலத்தின் கழுத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்றும் இருந்ததால் நிச்சயம் உளவாளி திமிங்கலம் தான் என கூறப்பட்டது. அதனை Hvaldimir the spy whale என அனைவரும் செல்லமாக அழைக்க தொடங்கிய நிலையில் திமிங்கலம் தற்போது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.